தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஜவகர் வித்யா நிகேதன் பள்ளி ஆண்டு விழா

ஜவகர் வித்யா நிகேதன் பள்ளி ஆண்டு விழா

ஜவகர் வித்யா நிகேதன் பள்ளி ஆண்டு விழா


ADDED : பிப் 27, 2024 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 06:42 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார் : வில்லியனுார் ஜவகர் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா நடந்தது.

ஜவகர் வித்யா நிகேதன் மேல்நிலைப் பள்ளியின் 19ம் ஆண்டு விழா திருக்காமீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு வில்லியனுார் மூத்த குடிமக்கள் சங்கத் தலைவர் விஸ்வநான் தலைமை தாங்கினார். ஐய்யப்ப சேவா சங்கத் தலைவர் ஏகாம்பரம் முன்னிலை வகித்தார். பள்ளி நிறுவனர் சிவராஜன் வரவேற்றார். பள்ளி முதல்வர் அஞ்சாலட்சி ஆண்டறிக்கை வாசித்தார்.

சிறப்பு விருந்தினராக சிவா எம்.எல்.ஏ., முன்னாள் சேர்மன் பாலமுருகன், தொழிலதிபர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பள்ளியில் நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினர்.

விழாவில் தனியார் பள்ளி சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் ரங்கநாதன், முருகையன், சம்பத், சிவசுப்ரமணியன் மற்றும் ஓய்வு பெற்ற தேசிய நல்லாசிரியர் தண்டபானி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் நடனம், இசை, நாடகம், கராத்ேத, யோகா, ஓவியம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தது. ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us