/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜீவா நினைவு நாள்: அமைச்சர் அஞ்சலி
/
ஜீவா நினைவு நாள்: அமைச்சர் அஞ்சலி
ADDED : ஜன 19, 2024 07:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: மறைந்த கம்யூ., தலைவர் ஜீவா நினைவு நாளையொட்டி, புதுச்சேரி அரசு சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்திய கம்யூ., மூத்த தலைவர் ஜீவா நினைவு நாளையொட்டி, சாரம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு, அரசு சார்பில், அமைச்சர் லட்சுமி நாராயணன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், லட்சுமிகாந்தன், பாஸ்கர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம் தலைமையில், முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், பொருளாளர் சுப்பையா உட்பட நிர்வாகிகள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

