தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ஆசிரியரிடம் நகை பறிப்பு

ஆசிரியரிடம் நகை பறிப்பு

ஆசிரியரிடம் நகை பறிப்பு


ADDED : மார் 08, 2024 06:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 06:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால் : காரைக்காலில் ரயில் நிலையத்தில் நடைபயணம் சென்ற தலைமை ஆசிரியரிடம் 7 சவரன் செயினை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

காரைக்கால் சிவாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் மகாலிங்கம் மனைவி தனலட்சுமி, 54; காரைக்கால் அரசு பள்ளி தலைமை ஆசிரியர். அவரது தோழி கிராம்பு தோட்டத்தை சேர்ந்தவர் ஜெயந்தி. இருவரும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள ரயில்வே ஸ்டேஷன் நடைபாதையில் நடைப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர், தனலட்சுமி முகத்தில் கையில் வைத்திருந்த திரவத்தை பூசிவிட்டு, அவர், கழுத்தில் இருந்த 7 சவரன் செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். அதன் மதிப்பு 2.50 லட்சம் ரூபாய்.

இதுக்குறித்த புகாரின் பேரில், நகர காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து நகையை பறித்துச் சென்ற நபரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us