தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விரிவுரையாளர் வீட்டில் நகை திருட்டு

விரிவுரையாளர் வீட்டில் நகை திருட்டு

விரிவுரையாளர் வீட்டில் நகை திருட்டு


ADDED : ஜூன் 20, 2025 06:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2025 06:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி : அரசு சட்டக் கல்லுாரி விரிவுரையாளர் வீட்டில் தங்க கம்மல் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி, அண்ணா நகர், 13வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் கணேஷ் ஞானசம்பந்தன். இவரது மனைவி அறிவழகி, 48; விழுப்புரம் அரசு சட்டக் கல்லுாரி கவுரவ விரிவுரையாளர். இவரது வீட்டில் வானுார் அடுத்த சேமங்கலத்தை சேர்ந்த மலர் என்பவர் வேலை செய்து வந்தார்.

கடந்த சில மாதங்களாக வீட்டில் வைக்கப்பட்டிருந்த 500, 1000 பணம் அடிக்கடி காணாமல் போனது. இதற்கிடையே, அறிவழகியின் 4 கிராம் தங்க கம்மல் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மலரிடம் விசாரித்தபோது, சரியான பதில் அளிக்கவில்லை. அதன்பின் மலர் வேலைக்கும் வரவில்லை.

இந்நிலையில், அறிவழகி, நகை மாயமானதில் வீட்டில் வேலை செய்த மலர் மீது சந்தேகம் இருப்பதாக உருளையன்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us