/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பீரோவில் இருந்த நகைகள் திருட்டு
/
பீரோவில் இருந்த நகைகள் திருட்டு
ADDED : மார் 17, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வில்லியனுார்: வில்லியனுார் அருகே வீட்டில் வைத்திருந்த நகைகள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த தொண்டமாநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன், 49. புதுச்சேரியில் பைக் மெக்கானிக் கடை வைத்துள்ளார். இவர் தனது வீட்டு பீரோவில் ஒரு பையில் தங்கஆரம், நெக்லஸ், செயின்,வளையல் உள்ளிட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான நகைகளை வைத்திருந்தார்.கடந்த 12ம் தேதி உறவினர் வீட்டு விசேஷத்திற்கு செல்ல பீரோவில் வைத்திருந்த நகையை எடுக்க சென்றபோது நகை பை காணவில்லை. புகாரின்பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப் இன்ஸ்பெக்டர் சரண்யா விசாரித்து வருகின்றனர்.