ADDED : டிச 26, 2024 05:38 AM
அரியாங்குப்பம்: பெங்களூருவை சேர்ந்தவர் சைத்தன்யா சாய்ராம், 31. தனது குடும்பத்தினருடன், பெங்களூரில் இருந்து, காரில், கடந்த 21ம் தேதி, புதுச்சேரிக்கு சுற்றுலா வந்தனர். ஆரோவில்லில் தங்கியிருந்த அவர், குடும்பத்தினருடன், காரில், கடந்த 23ம் தேதி, அரியாங்குப்பம் அடுத்த சின்ன வீராம்பட்டினம் கடற்கரைக்கு வந்தார்.
அங்கு, காரை நிறுத்தி விட்டு, சைத்தன்யா சாய்ராம் குடும்பத்துடன், கடல் குளிக்கசென்றார். அப்போது கார் பின் பக்க கதவின் கண்ணாடியை உடைத்து, அதில் இருந்த 45 கிராம் நகைகள் திருடு போயிருந்தது.அவற்றின் மதிப்பு 3.5 லட்சம் ரூபாய் ஆகும்.
இதுகுறித்து, சைத்தன்யா சாய்ராம் அளித்த புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து,அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக,ஒரு நபரை பிடித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.