/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜார்க்காண்ட் இளைஞரின் மனைவி தற்கொலை
/
ஜார்க்காண்ட் இளைஞரின் மனைவி தற்கொலை
ADDED : மார் 04, 2026 04:36 AM
வில்லியனுார்: ஜார்க்காண்ட் மாநில இளைஞரின் மனைவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஜார்க்காண்ட் மாநிலம், ஈஸ்ட் ஸிங்பூம் பகுதியை சேர்ந்த ராம்தாஸ் சர்தார் மகன் சிவாசர்தார். இவர் கடந்த 2023ம் ஆண்டு ஜோதி கலிண்டி, 20, என்ற பெண்ணை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர், கடந்த ஒரு வருடத்திற்கு முன், புதுச்சேரி, வில்லியனுார் அடுத்த வடமங்கலம் முருகர் கோவில் தெருவில் வீடு வாடகை எடுத்து தங்கி, அதே பகுதியில் உள்ள தனியர் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
சிவா சர்தார் இரவு பணிக்கு சென்று 2ம் தேதி அதிகாலை வீட்டிற்கு வந்தபோது மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சிவா சர்தார் புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

