ADDED : நவ 09, 2024 07:29 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி : குருநானக் ஜெயந்தியையொட்டி வரும் 15ம் தேதி ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
வரும் 15ம் தேதி குருநானக் ஜெயந்தி. மத்திய அரசு விடுமுறை தினமான அன்று, ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே அன்று, நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்க வேண்டும்.
இருப்பினும் அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
