தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் ஜிப்மர் முன்னாள் மாணவி முதலிடம்

 நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் ஜிப்மர் முன்னாள் மாணவி முதலிடம்

 நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் ஜிப்மர் முன்னாள் மாணவி முதலிடம்


ADDED : பிப் 03, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 04:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி தேர்வில் ஜிப்மர் முன்னாள் மாணவி அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

நீட் சூப்பர் ஸ்பெஷாலிட்டி நுழைவுத் தேர்வு கடந்தாண்டு டிசம்பரில் நடந்தது. தர வரிசையில், அறுவை சிகிச்சை பிரிவில் அகில இந்திய அளவில் ஜிப்மர் முன்னாள் மாணவி டாக்டர் ராஜலட்சுமி முதலிடம் பிடித்துள்ளார்.

ஆந்திரவைச் சேர்ந்தவர் இவர், ஜிப்மரில் கடந்த 2015ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்தார். பின்னர் பொது அறுவை சிகிச்சையில் எம்.எஸ்., பட்டம் 2022-24ல் பெற்றார். தொடர்ந்து, செப்டம்பர் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை ஜிப்மரில் மூத்த பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.

முதுநிலை பட்டப்படிப்பு பயிற்சிக் காலத்தில், டாக்டர் ராஜலட்சுமி சிறப்பான கல்வித் திறனை வெளிப்படுத்தி, இறுதி முதுநிலை பட்டப்படிப்பு பல்கலை தேர்வில் முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், தற்போது, நாட்டின் முன்னணி புற்றுநோய் சிகிச்சை மற்றும் பயிற்சி நிறுவனமான மும்பை டாடா மெமோரியல் மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை துறையில் மேற்படிப்பைத் தொடரத் திட்டமிட்டுள்ளார். இத்தகவலை ஜிப்மர் மக்கள் தொடர்பு அதிகாரி சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us