ADDED : நவ 21, 2026 09:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, சாரம் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் அங்கீத், 29; ஜிப்மர் மருத்துவமனையில் லிப்ட் ஆபரேட்டராக பணியாற்றி வந்தார். இதய நோயால் பாதிக்கப்பட்ட அங்கீத்திற்கு, கடந்த 2008 ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்ட அங்கீத், நேற்று (நவ.,20) காலை பாத்ரூம் செல்வதற்கு எழுந்தபோது, திடீரென மயங்கி விழுந்தார். இதைகண்டு அதிர்ச்சியடைந்த அவரது தாய் ஷமீம், உறவினர்கள் உதவியுடன் அங்கீத்தை மீட்டு அரசு மருத்துவமனை அழைத்து சென்றனர்.
அங்கு, டாக்டர் பரிசோதித்து அங்கீத் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்த புகாரின் பேரில் டி நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
