/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மரில் தொடர் மருத்துவ கருத்தரங்கு
/
ஜிப்மரில் தொடர் மருத்துவ கருத்தரங்கு
ADDED : ஆக 05, 2025 01:41 AM

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மரில் எலும்பியல் அறுவை சிகிச்சை துறை சார்பில், 'மருத்துவ பயிற்சிக்கான அடிப்படை எலும்பியல் புற்றுநோயியல் ' தலைப்பில் தொடர் மருத்துவ கருத்தரங்கம் நடந்தது.
கருத்தரங்கில், தீங்கற்ற மற்றும் வீரியம் மிக்க எலும்பு கட்டிகள் முதல் பயாப்ஸி, இமேஜிங் மற்றும் புற்றுநோய் சிகிச்சை குறித்து விவாதங்கள் நடைபெற்றது. தொடர்ந்து கூட்டு புற்றுநோய் பராமரிப்பு முக்கியத்துவத்தை வலியுறுத்தும் அமர்வுகள் நடந்தது.
பின், எலும்பியல் துறை முன்னாள் தலைவர் பட்ரோவின், நீண்டகால மருத்து சேவையை கவுரவிக்கும் விழா நடைபெற்றது. இவருக்கு, பாராட்டு பத்திரம், நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில், முதுகலை மருத்துவ பயிற்சியாளர்கள், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவ ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.