UPDATED : மே 25, 2026 06:16 PM
ADDED : மே 25, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், நாளை மறுநாள் (28ம் தேதி) புற நோயாளிகள் பிரிவு இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஜிப்மர் நிர்வாகம் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
பக்ரித் பண்டிகையையொட்டி, வரும் 28ம் தேதி மத்திய அரசு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம், ஜிப்மர் புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே அன்று, நோயாளிகள் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
எனினும், அவசர பிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
