/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் விளையாட்டு போட்டி டாக்டர்கள், ஊழியர்களுக்கு பரிசு
/
ஜிப்மர் விளையாட்டு போட்டி டாக்டர்கள், ஊழியர்களுக்கு பரிசு
ஜிப்மர் விளையாட்டு போட்டி டாக்டர்கள், ஊழியர்களுக்கு பரிசு
ஜிப்மர் விளையாட்டு போட்டி டாக்டர்கள், ஊழியர்களுக்கு பரிசு
ADDED : மார் 06, 2026 04:11 AM

புதுச்சேரி: ஜிப்மரில் விளையாட்டு போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் பிட் இந்தியா இயக்கத்தின் ஒரு பகுதியாக ஜிப்மரில் இரண்டு மாதமாக விளையாட்டு, கலாசார விழா நடந்தது. ஜிப்மரில் பணிபுரியும் மருத்துவர்கள், பணியாளர்களுக்காக வாலிபால், கால்பந்து, கிரிக்கெட், கபடி, பேட்மிண்டன், தடகளம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதேபோல் கலாசார போட்டிகளிலும் ஆர்வமாக கலந்து கொண்டு திறமையை வெளிப்படுத்தினர்.
இதனுடைய பரிசளிப்பு விழா நேற்று நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு இயக்குநர் (பொ) பவானா பதே தலைமையில் பரிசு வழங்கப் பட்டது.
விழாவில் மருத்துவ கண்காணிப்பாளர் சகா வினேத்குமார், கல்வித் துறை டீன் விக்ரம் கேட், நிர்வாக அதிகாரி ஹவா சிங், ஜிப்மர் பொழுது போக்கு தலைவர் விஷ்ணுகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.