/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜே.எம்.பி., பிளாக் ஸ்காட், எல்.எம்., அணிகள் வெற்றி
/
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜே.எம்.பி., பிளாக் ஸ்காட், எல்.எம்., அணிகள் வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜே.எம்.பி., பிளாக் ஸ்காட், எல்.எம்., அணிகள் வெற்றி
டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஜே.எம்.பி., பிளாக் ஸ்காட், எல்.எம்., அணிகள் வெற்றி
ADDED : பிப் 24, 2026 04:25 AM

புதுச்சேரி: புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் சங்கம் சார்பில் 16வது ஆண்டு டி20 கிரிக்கெட் போட்டிகள் மொரட்டாண்டி மைதானத்தில் கடந்த 7ம் தேதி துவங்கி நடந்து வருகிறது.
டி20 கிரிக்கெட்டின் 9வது போட்டியில் அபிஷேகபாக்கம் ஜே.எம்.பி., அணி, சின்ன வீராம்பட்டினம் ஈடன் அணி மோதியது. முதலில் ஆடிய ஜே.எம்.பி அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கவுதம் 46, ராம்பிரகாஷ் 20 ரன்கள் எடுத்தனர்.
பின், ஆடிய ஈடன் அணி 19 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 133 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. அணியின் ராஜேஷ் 52 ரன்கள் எடுத்தனர். ஜே.எம்.பி., அணியின் ராம்பிரகாஷ் 4 விக்கெட்களை வீழ்த்தியதால், ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார்.
10வது போட்டியில் முத்திரையர்பாளையம் பிளாக் ஸ்காட் அணி, கிளாசிக் அணி மோதியது. முதலில் ஆடிய பிளாக் ஸ்காட் அணி 18 ஓவர்களில் 10 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்தது. அணியின் நீலகண்டன் 60 எடுத்தனர். கிளாசிக் அணியின் ராஜ்குமார் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
பின் ஆடிய கிளாசிக் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. பிளாக் ஸ்காட் அணியின் நீலகண்டன் ஆட்டநாயனாக தேர்வு செய்யப்பட்டார்.
11வது போட்டியில் புதுவை சூப்பர் கிங்ஸ் அணி- அரியாங்குப்பம் எல்.எம் அணி மோதியது. முதலில் ஆடிய புதுவை சூப்பர் கிங்ஸ் அணி 18 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. அணியின் தியாகு 70 ரன்கள் எடுத்தனர்.
பின் ஆடிய எல்.எம். அணி 15 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அணியின் சதீஷ் 40, ரஞ்சித் 35 ரன்கள் எடுத்தனர். சதீஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புதுச்சேரி யூனியன் கிரிக்கெட் அசோசியேசன் கமிட்டி சேர்மன் சந்திரசேகர் நிர்வாகிகள் ராம் , முத்து, விக்கி, அஜய் ஆகியோர் செய்து வருகின்றனர்.

