UPDATED : அக் 07, 2026 09:32 PM
ADDED : அக் 07, 2026 06:26 PM
புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 10ம் தேதி வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
வேலை வாய்ப்பு அலுவலக இயக்குநர் சுரேந்தர் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் பாரதிதாசன் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 10ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை வாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முகாமில், புதுச்சேரி, தமிழகம் மற்றும் பிற மாநிலத்தை சார்ந்த 40 முன்னணி தனியார் நிறுவனங்களில் உள்ள 2000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
இதில், 10, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினிரிங், கலை, பார்மசி, நர்சிங், வணிகவியல, ஆசிரியர் பயிற்சி, எம்.பி.ஏ மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் பங்கேற்கலாம்.
முகாமில், கலந்து கொள்பவர்கள் தங்களது 10 தற்குறிப்பு (resume) மற்றும் கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
