/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
/
புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜன 04, 2024 03:26 AM
புதுச்சேரி: தொழிலாளர் துறை சார்பில், நாளை சுப்பையா திருமண மண்டபத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது.
புதுச்சேரி அரசின் தொழிலாளர் துறை வேலைவாய்ப்பு இயக்குனர் மாணிக்கதீபன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை வேலைவாய்ப்பகம் சார்பில், வீமக்கவுண்டன்பாளையம், கோரிமேடு ரோடு, சுப்பையா திருமண மண்டபத்தில் நாளை 5ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடக்கின்றது.
இதில் ரிலையன்ஸ் ஜியோ இன்போ, ரிலையன்ஸ் நிப்பான் லைன் இன்சூரன்ஸ், பிரசன்னா பெர்ஷியன் குரூப், பிளமேஜ் டெக்னாலஜி, ஸ்ரீராம் பினான்ஸ், சுப்ரீம் இண்டஸ்ட்ரி, டி.வி.எஸ்., பிளேஸ்மெண்ட் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் 450க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்ப உள்ளன.
பத்தாம்வகுப்பு, பிளஸ்2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, இன்ஜினியரிங், கலை, அறிவியல், வணிகவியல், பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் ரெஸ்யூம், கல்வி தகுதிக்கான அசல், நகல் சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.