ADDED : அக் 27, 2024 04:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில், புதுச்சேரி மன அமைதிக்கான ஆன்மீக மையம் மற்றும் மேஜிக் பஸ் பிளேஸ்மெண்ட் இணைந்து, இளை ஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
முகாமை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். அதில், 40க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றன. தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஆணையை, பாஸ்கர் எம்.எல்.ஏ., வழங்கினார். பா.ஜ., முன்னாள் தொகுதி தலைவர் லட்சுமிநாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.