/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாகூர் அரசு கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
/
தாகூர் அரசு கல்லுாரியில் வேலை வாய்ப்பு முகாம்
ADDED : ஜூலை 18, 2025 04:37 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை, தாகூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வேதியியல் துறை சார்பில் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.
முகாமில், சேதராப்பட்டில் உள்ள மயிலம் வெல்டிங் தொழிற்சாலையின் மேலாண் இயக்குநர் பாண்டி தலைமையில், வேதியியல் துறை தலைவர் பாலமுருகன் மற்றும் பேராசிரியர்கள் அஜய்குமார் குப்தா, வெங்கடசாமி முன்னிலையில் மாணவர்களுக்கான நேர்காணல் நடந்தது.
வேலை வாய்ப்பு முகாமில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 8 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கல்லுாரியின் முதல்வர் கருப்பசாமி நியமன ஆணையை வழங்கினார். வேதியியல் துறை தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.