தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

 புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்

 புதுச்சேரியில் நாளை வேலை வாய்ப்பு முகாம்


ADDED : டிச 19, 2025 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 19, 2025 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம், புதுச்சேரியில் நாளை (20ம் தேதி) நடக்கிறது.

புதுச்சேரி, துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதாரம் நடத்தும் அனைத்து சமூகத்தை சேர்ந்த வேலை தேடும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நாளை (20ம் தேதி) நடக்கிறது. முகாம், புதுச்சேரி நடேசன் நகர், 3வது குறுக்கு தெரு, எண்- 5, முதல் தளத்தில், காலை 9:30 மணி முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது.

இதில், 8 முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, 400க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இளைஞர்களை தேர்வு செய்கின்றனர். முகாமில், 18 முதல் 35 வயது வரை உள்ள, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி படித்த மாணவர்கள், கல்வி தகுதிக்கான உண்மை நகல் சான்றிதழ்களுடன், கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us