/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்க கூடாது அதிகாரிகளுக்கு ஜான்குமார் உத்தரவு
/
மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்க கூடாது அதிகாரிகளுக்கு ஜான்குமார் உத்தரவு
மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்க கூடாது அதிகாரிகளுக்கு ஜான்குமார் உத்தரவு
மழைநீர் தேங்கி மக்கள் பாதிக்க கூடாது அதிகாரிகளுக்கு ஜான்குமார் உத்தரவு
ADDED : ஆக 06, 2025 08:56 AM

புதுச்சேரி : காமராஜ் நகர் தொகுதியில் மழை தேங்கி மக்கள் பாதிக்காமல் நிரந்தர தீர்வு காண அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜான்குமார் உத்தரவிட்டார்.
புதுச்சேரியில் நேற்று முன்தினம் இரவு கன மழை கொட்டி தீர்த்தது. சில மணி நேரம் பெய்த மழைக்கே புதுச்சேரி வெள்ளக்காடானது.
தாழ்வான பகுதிகளில் பல அடி உயரம் வரை மழைநீர் தேங்கியது. பொது மக்கள் மிகுந்த அவதியடைந்தனர். ஆண்டுதோறும் காமராஜர் நகர் தொகுதியில் உள்ள கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர் போன்ற பகுதிகள் பெரும் பாதிப்பிற்குள்ளாகும். வீடுகளை வெள்ளம் சூழுவது வழக்கம்.
இந்நிலையில், காமராஜ் நகர் தொகுதியில் மழைக் காலத்தையொட்டி, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அமைச்சர் ஜான்குமார் தலைமை தாங்கினார். பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் சீனுவாசன், ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் லுாயி பிரகாசம், இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம், கணேஷ், உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ் ராஜ், செயற்பொறியாளர் மலைவாசன், உதவிப்பொறியாளர் சரவணன், இளநிலைப்பொறியாளர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், மழைக் காலத்தில் காமராஜ் நகரில் மழை நீர் தேங்கி, மக்கள் பாதிக்காமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், அதற்கு நிரந்தர தீர்வு காண, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

