/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
/
ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
ஜெயமூர்த்தி ராஜா நகரில் ஜான்குமார் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 03, 2026 05:25 AM

புதுச்சேரி: முதலியார்பேட்டை தொகுதி பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் நேற்று ஜெயமூர்த்தி ராஜா நகரில் வீடு, வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.
முதலியார்பேட்டை தொகுதியில் தே.ஜ., கூட்டணி சார்பில் போட்டியிலும் பா.ஜ., வேட்பாளர் ஜான்குமார் நேற்று கூட்டணி கட்சியினருடன் இணைந்து ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி பகுதிகளில் வீடு, வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார். அப்போது அவர்களை பொதுமக்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்றனர்.
ஓட்டு சேகரிப்பின் போது, இப்பகுதியில் சாலை, கழிவுநீர் வடிகால் வாய்க்கால், சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, வெற்றி பெற்றதும் விரைந்து மேம்படுத்துவேன். அரசின் மக்கள் நலத்திட்டங்களை மக்கள் பிரதிநிதியாக உடனுக்குடன் கொண்டு வருவேன் என உறுதி அளித்து ஓட்டு சேகரித்தார்.
இதில், பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

