பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் இணை தமிழ்ப் பயிலரங்கு
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் இணை தமிழ்ப் பயிலரங்கு
ADDED : மார் 25, 2026 11:24 PM

புதுச்சேரி: பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில், தமிழ்த்துறை கணித் தமிழ்பேரவை சார்பில், இணைய தமிழ்ப் பயிரலங்கம் துவக்க விழா நடந்தது.
கல்லுாரி கருத்தரங்க அறையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி முதல்வர் மதிவாணன் தலைமை தாங்கினார். பேராசிரியர் மாதரசி வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் சாகுல் ஹமீது வாழ்த்துரை வழங்கினார்.
முன்னாள் பேராசிரியர் பட்டம்மாள், இணையமும், பதின்பருவ மகளிரும் என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி பயிலரங்கின் நோக்கங்கள் குறித்து பேசினார். பேராசிரியர் ராஜலட்சுமி மின் நுாலங்கள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து வினாடி வினா போட்டியில் வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் நாகரத்தினம், கீதா, மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
பேராசிரியர் குப்புசாமி நன்றி கூறினார்.
