ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செந்தாமரை நகரில் ஓட்டு சேகரிப்பு
ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் செந்தாமரை நகரில் ஓட்டு சேகரிப்பு
ADDED : ஏப் 05, 2026 06:34 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் நேற்று செந்தாமரை நகர், சூரிய காந்தி நகரில் வீடு வீடாக சென்று தர்பூசணி சின்னத்திற்கு ஓட்டு சேகரித்தார்.
தொடர்ந்து அம்பிகா அடுக்குமாடி குடியிருப்பு சங்க நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார். அங்கு மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்டங்கள் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.
பின் புதுச்சேரி வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான புத்தகங்களையும் வழங்கினார். ஓட்டு சேகரிப்பின் போது காமராஜ் நகர் தொகுதி ஆன்மிக பிரிவு தலைவர் சாய் சுதாகர், காமராஜ் நகர் ஆலய அர்ச்சகர்கள் சரவண குருக்கள், சிவசந்திர கணேஷ் , ஸ்ரீராம், லட்சுமி நாராயணன், வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
