காமராஜ் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு தாக்கல்
காமராஜ் நகர் தொகுதியில் ஜோஸ் சார்லஸ் மார்டின் மனு தாக்கல்
ADDED : மார் 23, 2026 10:27 PM

புதுச்சேரி: காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில், காமராஜர் நகர் தொகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் போட்டியிட உள்ளார். இதற்காக அவர் ஆதி திராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலரிடம் தனது குடும்பத்துடன் வந்து வேட்புமனுவை நேற்று தாக்கல் செய்தார். பின் செய்தியாளர்களை சந்தித்த லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு உள்ளதாகவும் , முதல்வர் ரங்கசாமி தலைமையில் இந்த கூட்டணி மகத்தான வெற்றி பெரும்.
மக்களுக்கு தேவையானதை , அவர்களை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வோம். எங்கள் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரியை சிங்கப்பூராக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் அதற்கான திட்டங்களையும் தயாராக வைத்துள்ளோம். லட்சிய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள மற்றொரு தொகுதியான நெல்லித்தோப்பில் ஜெயக்குமார் போட்டியிட உள்ளார்.
இரண்டாவது வேட்பாளராக தான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவித்தார் . தொடர்ந்து கூட்டணி கட்சியான அ.தி.மு.க.,வின் அலுவலகத்திற்கு சென்ற ல.ஜ.க., தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகனை சந்தித்து வாழ்த்து பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்துள்ள ல.ஜ.க., தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
