/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
/
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவிப்பு
ADDED : டிச 12, 2025 05:22 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 14ம் தேதி லட்சிய ஜனநாயக கட்சியை துவங்க இருப்பதாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.
சமூக சேவகரான ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் புதுச்சேரியில் கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக சேவைகள் செய்து வருகிறார்.
மேலும், தொகுதி தோறும் தனது பெயரில் மன்றங்கள் துவங்கி வருவ தோடு, அந்த மன்றங்கள் மூலம் தினசரி உணவு வழங்கவது, வாய்க்கால் துார் வாருவது, மழை நிவாரணம் வழங்குவது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.
மேலம், தரமற்ற குடிநீர், போலி மருந்து போன்ற பொதுமக்கள் பிரச்னைகளுக்கு எதிராக அரசை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றி வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 'மனித உரிமைகளை பரப்புதல் உலகலாவிய கல்வியின் சக்தி' என்ற பொருளில் ஜெனிவாவில் நடந்த ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்ற ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பேசுகையில், புதுச்சேரியில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்த இருப்பதாக பேசினார்.
இந்நிலையில், வரும் 14ம் தேதி புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சியை துவங்க உள்ளதாக, ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அறிவித்துள்ளார்.

