ADDED : டிச 15, 2025 06:08 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: காலப்பட்டு மத்திய சிறையில், புதுச்சேரி நீதிபதிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி தலைமை நீதிபதி ஆனந்து, குற்றவியல் நீதிபதி ஏஸ்வந்தராவ், மாவட்ட சட்டபணிகள் ஆணைய நீதிபதி ரமேஷ் ஆகியோர் காலப்பட்டு மத்திய சிறையினை ஆய்வு செய்ய வந்தனர். அவர்களை சிறைத்துறை ஐ.ஜி., சிவராஜ் மீனா, தலைமை கண்காணிப்பாளர் வெங்கடேசன் ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து நீதபதிகள் சிறையின் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்தனர். பின், சிறையில் அடிப்படை வசதிகளை பார்வையிட்டனர். தொடர்ந்து சிறை வாசிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
பெண் சிறை வாசிகளுக்கு யுமாகுலேட் ஹோம் ஜாய்ஸ் தொண்டு நிறுவனம் மூலம் புடவை, பெட்ஷீட் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சிறைத்துறை கண்காணிப்பாளர் கபிலன், சிவநேசன், வழக்கறிஞர் தயாவதி ஆகியோர் உடனிருந்தனர்.
