ADDED : நவ 16, 2024 02:06 AM
நெட்டப்பாக்கம்: புதுச்சேரி முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், புதுச்சேரி திரை இயக்கம் இணைந்து சினிமாவை பற்றி சிந்திப்போம் என்ற தலைப்பில் சிறார் திரைப்பட விழா நடத்தின.
ஏம்பலம் மறைமலையடிகள் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், ஒருங்கிணைப்பாளர் ஹேமாவதி படக் காட்சியினை துவக்கி வைத்தார். ஓலி வில்லியம்ஸ், பில் சாம்சன் இணைந்து தயாரித்த பிளாக் ஹோல் என்ற குறும்படம், இயக்குனர் சத்யஜித்ரே இயக்கிய 'டூ' திரைப்படம், 'ரெட் பலுான்' பிரெஞ்ச் படம், 'பாரிஷ் பர் ஏக் நிபன்த்' மராத்தி படம், இயக்குனர் மணி நாகராஜ் இயக்கிய 'டு பென்சில்ஸ்' படங்கள் திரையிடப்பட்டன.
மாணவர்களுடைய செயல்பாட்டுத் திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், திரைப்பட விமர்சனம், கலந்துரையாடல் நடந்தது.
பள்ளி துணை முதல்வர் ராஜகோபால், தலைமை ஆசிரியர் நிலை 2 கீதா, முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைச் செயலர் பச்சையம்மாள், திரைப்படக் கருத்தாளர் ஆதித்தன் உட்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை செயற்குழு உறுப்பினர்கள் கணேச சுப்ரமணியம், ரமேஷ் பைரவி செய்திருந்தனர்.
