தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜோதி கண் பராமரிப்பு மருத்துவமனை திறப்பு

 ஜோதி கண் பராமரிப்பு மருத்துவமனை திறப்பு

 ஜோதி கண் பராமரிப்பு மருத்துவமனை திறப்பு


ADDED : பிப் 25, 2026 05:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 05:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் 28வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜோதி கண் பராமரிப்பு மருத்துவமனை திறப்பு விழா நடந்தது.

ரோட்டரி மாவட்டத்தின் ஆரஞ்சு திட்டத்தின் கீழ் ஜோதி கண் பராமரிப்பு முதுநிலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய மருத்துவமனையில், பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கண் சிகிச்சை வழங்கப்பட உள்ளது.அதில், ஒரு நபருக்கு ரூ. 50, 5 நபர்கள் உள்ள ஒரு குடும்பத்திற்கு ரூ. 150 கட்டணத்தில் 28ம் தேதி வரை சலுகை வழங்கப்படுகிறது.

புதுச்சேரி, கலவை சுப்புராய செட்டி தெருவில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையை ரோட்டரி மாவட்ட ஆளுநர் லியோன் தலைமை தாங்கி, திறந்து வைத்தார். மாவட்ட ஆலோசகர் பாலாஜி வாழ்த்தி பேசினார்.டாக்டர் வனஜா வைத்தியநாதன்,வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர்.

கண் பவுண்டேஷன் நிர்வாக இயக்குநர் சித்ரா ராமமூர்த்தி, உதவி ரோட்டரி உறுப்பினர் ஒருங் கிணைப்பாளர் மணி, ஜெயகுமார், ஆனந்தன், ரோட்டரி அறக்கட்டளை முன்னாள் சேர்மன் ராமன், சேர்மன் ரவி, தண்டபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us