ADDED : நவ 06, 2024 06:05 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில், கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழாவையொட்டி, கஜமுகாசூரன் வீதி உலா நடந்தது.
லாஸ்பேட்டை சிவசுப்ரமணிய கோவிலில், கந்தர்சஷ்டி சூரசம்ஹார விழா, கடந்த 2ம் தேதி மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிேஷகம் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
அதனை அடுத்து, 2ம் நாள் விழாவான, 3ம் தேதி இரண்டு மற்றும் மூன்றாம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் முருகன் சாமி இந்திர விமானத்தில் வீதியுலா நிகழ்ச்சியும். தொடர்ந்து, முருகன் சாமி, சூரிய பிரபையில் வீதியுலா நடந்தது.
அதனை தொடர்ந்து, நேற்று முன்தினம், நான்காம் கால மற்றும் ஐந்தாம் கால யாக பூஜையும், முருகன், ரிஷப வாகனத்தில், வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று ஆறாம் கால பூஜையுடன், நவ வீரர்கள் சம்ஹார வேல் அபிேஷகம் அடுத்து, கஜமுகாசூரன் மற்றும் விநாயகர், நவவீரர்களுடன், முருகன் சாமி வீதியுலாவில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் மக்கள் செய்திருந்தனர்.
