தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 'காகோ ஜீவன்' கருத்தரங்கம்

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 'காகோ ஜீவன்' கருத்தரங்கம்

 வெங்கடேஸ்வரா கல்லுாரியில் 'காகோ ஜீவன்' கருத்தரங்கம்


ADDED : மார் 11, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 04:08 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவ கல்லுாரி மற்றும் புதுச்சேரி நியூ மெடிக்கல் சென்டர் ஆகியன சார்பில், 'காகோ ஜீவன்' என்ற தலைப்பில் சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளை வலுப்படுத்துவது குறித்த கருத்தரங்கம் நடந்தது.

வெங்கடேஸ்வரா கல்வி குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி வித்யா தலைமை தாங்கினார்.நியூ மெடிக்கல் சென்டர் சி.இ.ஓ., அர்ஜூன், மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர் ஜோசப்ராஜ் உள்ளிட்டோர் பேசினர்.

கருத்தரங்கில் காகோ ஜீவனின் முக்கிய நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர மருத்துவமனைகளின் சேவை தரம், நோயாளிகள் பாதுகாப்பு, தொற்று கட்டுப்பாடு, அவரசர நிலை மேலாண்மை, மனிதவள மேலாண்மை, செயல்திறன் மேம்பாடு மற்றும் நிர்வாக திறன் மேம்படுகள் குறித்து பேசினர்.

கருத்தரங்கில் புதுச்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பல மருத்துவமனைகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட டாக்டர்கள், மருத்துவமனை நிர்வாகிகள், தலைமை செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us