/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலாப்பட்டு தொகுதி தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
காலாப்பட்டு தொகுதி தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 03, 2026 04:45 AM

புதுச்சேரி: காலாப்பட்டு தொகுதி தி.மு.க., அவசர செயற்குழு கூட்டம் நடந்தது.
லப்போர்த் வீதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு மாநில அமைப்பாளர் சிவா தலைமை தாங்கினார். அனிபால் கென்னடி, எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தொகுதி செயலாளர் சத்தியவேலு வரவேற்றார்.
கூட்டத்தில், சமீபத்தில் தி.மு.க.,வில் இணைந்த புதுச்சேரி வன்னியர் பாதுகாப்பு இயக்கத் தலைவர் செந்தில், தொகுதி நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த கூட்டத்தில் காலாப்பட்டு தொகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவது, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.
வீடு, வீடாக சென்று 30 சதவீத உறுப்பினர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டது.
இதில், பொதுக்குழு உறுப்பினர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல், மீனவரணி அமைப்பாளர் கோதண்டபாணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

