/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் கலச பிரதிஷ்டை
/
குரு சித்தானந்த சுவாமி கோவிலில் கலச பிரதிஷ்டை
ADDED : மே 29, 2025 01:24 AM

புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில், 188வது ஆண்டு குருபூஜையொட்டி, நேற்று கலச பிரதிஷ்டை செய்து, கணபதி ஹோமம் நடந்தது.
குருபூஜை விழாவையொட்டி, நேற்று மாலை கலச பிரதிஷ்டை செய்யப்பட்டு, கணபதி ஹோமம் நடந்தது. அதை தொடர்ந்து, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது. இன்று 29ம் தேதி, காலை 5:50 மணிக்கு கணபதி ஹோமம், நவகிரக ேஹாமம், ருத்ர ஜபம் நடக்கிறது. முக்கிய நிகழ்வான காலை 7:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிேஷகம் செய்து, குருபூஜை நடக்கிறது. தொடர்ந்து, 9:00 மணிக்கு பூர்ணாஹூதி, கலசம் புறப்பாடு நிகழ்ச்சியும், 10:00 மணிக்கு கலசாபிேஷகம் தொடர்ந்து, அலங்கார மகா தீபாராதனை நடக்கிறது.
காலை 11:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு தீபாராதனை, இரவு 10:00 மணிக்கு அர்த்தஜாம பூஜை நடக்கிறது.