ADDED : அக் 03, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத் துறை சார்பில், காமராஜர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இதனையொட்டி,புதுச்சேரி, காமராஜ் சாலை - அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில், சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.,க்கள் நேரு, பாஸ்கர், பிரகாஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.