/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர், நிர்வாகிகளுக்கு காலண்டர், பட்டாசு வழங்கல்

ADDED : அக் 23, 2024 04:52 AM

புதுச்சேரி : காமராஜர் நகர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ், தொகுதி காங்., நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் 2025ம் ஆண்டு காலண்டரை வழங்கினார்.
காமராஜர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ் தொகுதி காங்., நிர்வாகிகளுக்கு தீபாவளி முன்னிட்டு பட்டாசு, அடுத்த 2025ம் ஆண்டிற்கான காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, மாநில காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் காமராஜர் தொகுதி காங்., பொறுப்பாளர் தேவதாஸ், தொகுதி காங்., நிர்வாகிகளுக்கு பட்டாசு மற்றும் அடுத்த ஆண்டு 2025ம் ஆண்டிற்கான காலண்டரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காங்., மூத்த நிர்வாகி மணி, துணைத் தலைவர் தமிழரசி, சாரம் ரவிச்சந்திரன், செயற்குழு உறுப்பினரும், முன்னாள் கவுன்சிலர் சேகர், வட்டார காங்., தலைவர் செல்வம், அயலக அணி தலைவர் டு பிளஸ் பரந்தாமன், இலக்கிய அணி தலைவர் கோவிந்தராஜ், மாநில மகளிர் அணி துணை தலைவர் ஜெயலட்சுமி, வடக்கு மாவட்ட தலைவி சித்ரா பாலாஜி, தொகுதி தலைவி கலா மணிமேகலை, தொகுதி துணை தலைவர் டாக்டர் சுரேஷ், தொகுதி மனித உரிமை பிரிவு சரவணன் மற்றும் காமராஜர் தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.