இரண்டு முறை இந்திய பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர்: தற்காலிக சபாநாயகர் அன்பழகன்
இரண்டு முறை இந்திய பிரதமர்களை உருவாக்கியவர் காமராஜர்: தற்காலிக சபாநாயகர் அன்பழகன்
UPDATED : ஜூலை 15, 2026 10:55 PM
ADDED : ஜூலை 15, 2026 07:01 PM

புதுச்சேரி: இந்தியாவில் கல்வி புரட்சி செய்தவர் முதல்வர் ரங்கசாமி என புதுச்சேரி தற்காலிக சபாநாயகர் அன்பழகன் பேசினார்.
விழாவில் அவர் பேசியதாவது:
நிகழ்ச்சியில் தற்காலிக சபாநாயகர் பேசுகையில்,
காமராஜர் ஆட்சி தமிழகத்தான் பொற்கால ஆட்சி. அவரது ஆட்சியில், விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் அதிகப்படியான திட்டம் தீட்டப்பட்டது. வைகை உட்பட ஒன்பது பெரிய அணைகள் கட்டப்பட்டது. இதற்கு பிறகு அணைகள் கட்டுவதில் யாரும் அக்கரை செலுத்தவில்லை. இதன் விளைவாக பக்கத்து மாநிலங்களில் தண்ணீர் பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப பள்ளி 2 கிலோமீட்டருக்கு ஒரு நடுநிலை பள்ளி 3 கிலோமீட்டருக்கு ஒரு உயர்நிலைப் பள்ளி என பல பள்ளிகளை உருவாக்கினார். இரண்டு முறை இந்திய பிரதமர்களை உருவாக்கிய கிங் மேக்கர்.
புதுச்சேரியின் காமராஜர் முதல்வர் ரங்கசாமிதான். முதல்வர் ஏழை மாணவர்களுக்கு கல்வி அளிக்க அதிகாரிகளிடம் பேசி என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வார். இந்தியாவில் கல்வி புரட்சி செய்தவர் முதல்வர் ரங்கசாமி. இவ்வாறு அவர் பேசினார்.
