தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய அளவிலான போட்டிகளில் காமராஜர் அரசு கல்லுாரி சாதனை

தேசிய அளவிலான போட்டிகளில் காமராஜர் அரசு கல்லுாரி சாதனை

தேசிய அளவிலான போட்டிகளில் காமராஜர் அரசு கல்லுாரி சாதனை


UPDATED : அக் 14, 2026 07:29 PM

ADDED : அக் 14, 2026 07:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 14, 2026 07:29 PM ADDED : அக் 14, 2026 07:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருபுவனை: தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்த கலித்தீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கல்லுாரி என்.சி.சி., தரைப்படை பிரிவு இறுதியாண்டு மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பதவி உயர்வு வழங்கி கவுரவிக்கும் விழா நடந்தது.

மதகடிப்பட்டு அடுத்த கலிதீர்த்தாள்குப்பம் காமராஜர் அரசு கலைக் கல்லுாரியில் என்.சி.சி., தரைப்படை பிரிவு இறுதியாண்டு மாணவ, மாணவிகள் இமாச்சலபிரதேசத்தில் மலையேறும் போட்டி, மத்திரபிரதேசத்தில் நடந்த தேசிய அளவில் துப்பாக்கி சுடும் போட்டி, உத்ரகாண்ட்டில் நடந்தை கலாசார விழா போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்தனர்.

இந்நிலையில், தேசிய மாணவர் படையின் சார்பில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு பராட்டு விழா மற்றும் பதவி உயர்வு வழங்கும் விழா நடந்தது.

விழாவுக்கு கல்லுாரி முதல்வரும், என்.சி.சி.,தரைப்படை பிரிவு அலுவலருமான லெட்டினன்ட் கதிர்வேல் தலைமை தாங்கி, சாதனை படைத்த மாணவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us