/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
/
சுப்ரமணிய பாரதி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
சுப்ரமணிய பாரதி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
சுப்ரமணிய பாரதி பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 16, 2025 01:40 AM

திருக்கனுார் : திருக்கனுார் சுப்ரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாள் விழா நடந்தது.
பள்ளி முதல்வர் சம்பத் தலைமை தாங்கினார். துணை முதல்வர் சுசிலா சம்பத் வரவேற்றார்.
நிர்வாக இயக்குநர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த காமராஜர் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவையொட்டி, எல்.கே.ஜி முதல் 9ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஓவியம் வரைதல், ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுதல், கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிர்வாக இயக்குநர் ஹரிஷ்குமார் நன்றி கூறினார். ஏற்பாடுகளை பொறுப்பாசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தினர். மாணவர்கள் கிரண்யா, லிஷிதா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.