/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயின் பறித்த காஞ்சி நபருக்கு சிறை
/
செயின் பறித்த காஞ்சி நபருக்கு சிறை
ADDED : அக் 24, 2025 04:08 AM

அரியாங்குப்பம்: ஓய்வு பெற்ற செவிலியரிடம், தாலி செயின் பறித்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
பு துச்சேரி, தவளக்குப்பம் ஆனந்தா நகரைச் சேர்ந்தவர் எழிலரசி, 59; ஓய்வு பெற்ற செவிலியர். அக்., 13ல், பொருட்கள் வாங்க, வீட்டில் இருந்து கடைக்கு தவளக்குப்பம் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது, பைக்கில் வந்த நபர் திடீரென அவரது இரண்டரை சவரன் தாலி செயினை பறித்து சென்றார்.
தவளக்குப்பம் போலீசார் விசாரணையில், இதில் ஈடுபட்டது காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை, சாலமங்கலத்தைச் சேர்ந்த பெருமாள், 44, என, தெரிந்தது. பெருமாளை கைது செய்த போலீசார், கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி, காலாப்பட்டு சிறையில் நேற்று அடைத்தனர்.

