/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரிந்த மனைவியின் ஆபாச வீடியோ புகைப்படங்கள் வெளியிட்டு மிரட்டல் காஞ்சிபுரம் ஆசாமி கைது

ADDED : நவ 26, 2024 06:39 AM

புதுச்சேரி: வில்லியனுார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மூன்று நாட்களுக்கு முன் தனது அந்தரங்க போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை இன்ஸ்டாகிராம், வாட்ஸ் ஆப் மூலம் தனது உறவினர்களுக்கும், தமக்கு அனுப்பி நான் சொல்லும் இடத்திற்கு தனிமையில் வர வேண்டும் என மிரட்டுவதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
ஆபாச வீடியோக்களை அனுப்பிய வாட்ஸ்ஆப், இன்ஸ்டாகிராம் எண், எந்த ஊரில் இருந்து இயங்குகிறது என்பதை கண்டறிந்தனர். திண்டிவனத்தில் இருந்து வெளியான ஆபாச வீடியோக்கள், காஞ்சிபுரத்தை சேர்ந்த பாண்டியன், 30; வெளியிட்டு மிரட்டியது தெரியவந்தது.
தொடர் விசாரணையில், பாண்டியன், அந்த பெண்ணின் 2வது கணவர். அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததால் அவர் பிரிந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லாவிட்டால் அசிங்கப்படுத்துவேன் என ஆபாச வீடியோக்களை அந்த பெண்ணின் உறவினர்களுக்கு அனுப்பியது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி தலைமையிலான போலீசார் பாண்டியனை கைது செய்து, ஆபாச படங்கள் அனுப்ப பயன்படுத்திய மொபைல்போனை பறிமுதல் செய்து, பாண்டியனை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
எஸ்.பி., பாஸ்கரன் கூறுகையில்; பெண்கள் தங்களின் தனிப்பட்ட புகைப்படங்களை மற்றவர்களுக்கு பகிர்வதால் பின்னாளில் அந்த புகைப்படம், வீடியோக்களால் பிரச்னைக்கு ஆளாகின்றனர். தனிப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் போது மிகுந்த எச்சரிக்கையுடன், கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.