/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வலம்புரி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்
/
வலம்புரி விநாயகர் கோவிலில் கந்த சஷ்டி பாராயணம்
ADDED : செப் 30, 2024 05:52 AM

புதுச்சேரி: குறிஞ்சி நகரில் நடந்த கந்த சஷ்டி பாராயணத்தில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி மாநில கந்தர் சஷ்டி பாராயணக் குழுவின் 155-வது கந்த சஷ்டி பாராயணம் லாஸ்பேட்டை குறிஞ்சி நகர் வலம்புரி விநாயகர் கோவிலில் நேற்று நடந்தது. சஷ்டி பாராயணத்தை சிறப்பு தலைவர் சீனுமோகன் தாஸ் துவங்கி வைத்தார்.
முருகபாபுஜி தலைமை தாங்கினார். தொடர்ந்து, கோவில் அறங்காவல் குழு தலைவர் புருஷோத்தமன் மற்றும் கந்த சஷ்டி பாராயண குழுவினர் சஷ்டி பாராயணம் செய்தனர். பல்வேறு பகுதிகளை சேர்ந்த முருக பக்தர்களும் பங்கேற்றனர்.
சஷ்டி பாராயணத்திற்கு முன்பு 48 நாட்கள் தொடர்ந்து நடக்கும் சுப்ரமணிய ஹோமத்தின் பத்தாவது நாள் ஹோமம், லாஸ்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில் நடந்தது. பின், கந்த சஷ்டி பாராயணம் உலக நன்மைக்காக இடைவிடாது தொடர்ந்து நடத்தி வரப்படுவது குறிப்பிடதக்கது.