ADDED : ஜன 24, 2026 06:27 AM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா கந்துாரி விழாவை முன்னிட்டு, 130 அடி உயர கொடிமரம் நடும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்கால், திருநள்ளாறு சாலையில் உள்ள மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்காவில் 203ம் ஆண்டு கந்துாரி விழா வரும் 29ம் தேதி நடக்கிறது. அடுத்த மாதம் 7ம் தேதி இரவு சந்தனக்கூடு ஊர்வலம் நடக்கிறது. விழாவை தொடக்க நிகழ்வாக தர் கா அருகே 130 அடி உயர கொடிமரம் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஏராளமான இஸ்லாமியர் கள் பங்கேற்றனர்.
