/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., மகளிர் அணி தலைவி நியமனம்
/
காங்., மகளிர் அணி தலைவி நியமனம்
ADDED : பிப் 21, 2025 04:55 AM

புதுச்சேரி: புதுச்சேரி, காங்., மகளிர் அணி மாநில தலைவியாக நிஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி சட்ட சபை தேர்தலில் காங்., போட்டியிட தாயாராகி வருகிறது. இதையொட்டி, காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., மாநிலம், மாவட்டம், தொகுதி வாரியாக நிர்வாகிகளை சந்தித்து கருத்து கேட்டு வருகிறார்.
இதனிடையே காங்., கட்சியில் பல்வேறு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, காங்., மகளிர் அணி மாநில தலைவியாக நிஷாவை, அகில இந்திய காங்., பொதுச் செயலாளர் வேணுகோபால், நியமித்துள்ளார். அவருக்கு மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., மற்றும் காங்., நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.