ADDED : ஆக 20, 2026 03:12 AM
புதுச்சேரி: முன்னாள் அமைச்சர் கண்ணன் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை,அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும் என முன்னாள் எம்.எல்.ஏ., மனோகர், கவர்னர், முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
புதுச்சேரி அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடம் பெற்ற கண்ணன் 1985ல் அமைச்சராக இருந்தார். பின் சபாநாயகர், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்.
அவர், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம், கிராமங்கள் தோறும் அங்கன்வாடி மையங்கள்,பெண்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்குதல், பத்திரப்பதிவில் புகைப்படம் ஒட்டும் நடைமுறையை அறிமுகப்படுத்துதல், சுகாதாரத் துறையின் மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்துதல் உட்பட பல நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
புதுச்சேரி அரசு பல்வேறு தேசியத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் முக்கிய ஆளுமைகளின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு சார்பாக அனுசரித்து வருகிறது. அதன் அடிப்படையில், அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் பணியாற்றியவரும், பல அரசுப் பொறுப்புகளை வகித்தவருமான கண்ணன் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளை அரசு விழாவாக அனுசரிக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
