/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருபுவனை பகுதியில் கபசுர குடிநீர் வழங்கல்
/
திருபுவனை பகுதியில் கபசுர குடிநீர் வழங்கல்
ADDED : பிப் 21, 2025 04:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை: ஆயுஷ் துறையின் சார்பில், வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் கலிதீர்த்தாள்குப்பம் திரவுபதியம்மன் கோவில் திடல் மற்றும் திருபுவனை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களில் 'கபசுர குடிநீர்' வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, பொது மக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி, தொடங்கி வைத்தார். இம்முகாமில் பெரியவர்களுக்கு 15 மில்லி அளவும், சிறுவர்களுக்கு 5 முதல் 10 மில்லி அளவும் மருத்துவர்கள் அறிவுரைப்படி கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

