sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

காரைக்கால் அம்மையார் கோவில் படம் புதுச்சேரி அரசு காலண்டரில் இல்லை நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்

/

காரைக்கால் அம்மையார் கோவில் படம் புதுச்சேரி அரசு காலண்டரில் இல்லை நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்

காரைக்கால் அம்மையார் கோவில் படம் புதுச்சேரி அரசு காலண்டரில் இல்லை நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்

காரைக்கால் அம்மையார் கோவில் படம் புதுச்சேரி அரசு காலண்டரில் இல்லை நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம்


ADDED : ஜன 06, 2024 05:09 AM

Google News

ADDED : ஜன 06, 2024 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்கால், : புதுச்சேரி அரசு வெளியிட்ட காலண்டரில் காரைக்கால் அம்மையார் கோவில் படம் இல்லாததற்கு நாஜிம் எம்.எல்.ஏ., கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை;

காரைக்கால் மாவட்டத்தில், சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்ட காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார். 63 நாயன்மார்களில் பெண் நாயன்மாரான காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை விவரிக்கும் வகையில் ஆண்டுதோறும் மாங்கனி திருவிழா காரைக்காலில் கொண்டாடப்படுகிறது. விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.

இதனிடையே புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில், புதிதாக வெளியிடப்பட்ட 2024ம் ஆண்டு காலண்டரில் காரைக்கால் அம்மையார் கோவில் படம் இடம் பெறவில்லை.

அதற்கு பதில், புதுச்சேரி வேதபுரீஸ்வரர் கோவில் படம் இடம் பெற்றுள்ளது. அம்மையார் கோவில் திருவிழா என்றால் மாங்கனித் திருவிழா என, அனைவருக்கும் தெரிந்தது.

அதிகாரிகள் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு கண்டனத்திற்குரியது. வரும் காலத்தில் இதுபோல் தவறு நடக்காமல் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர், தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us