தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காரைக்கால் கார்னிவல் -2026 கவர்னர் இன்று துவக்கி வைக்கிறார்

 காரைக்கால் கார்னிவல் -2026 கவர்னர் இன்று துவக்கி வைக்கிறார்

 காரைக்கால் கார்னிவல் -2026 கவர்னர் இன்று துவக்கி வைக்கிறார்


ADDED : ஜன 16, 2026 06:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 16, 2026 06:57 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் கார்னிவல் - 2026 மற்றும் மலர் கண்காட்சியை இன்று கவர்னர் துவக்கி வைக்கிறார்.

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை, கலைபண்பாட்டுத் துறை, வேளாண் துறை ஆகியன சார்பில், மாவட்ட விளையாட்டு மைதானத்தில் காரைக்கால் கார்னிவல் -2026 மற்றும் மலர் கண்காட்சி இன்று 16ம் தேதி முதல் வரும் 18ம் தேதி வரை நடக்கிறது. விழாவில் கைப்பந்து, கபடி, இறகுப்பந்து, படகு போட்டிகள், உணவுத்திருவிழா, மலர் கண்காட்சி, நாய் கண்காட்சி நடக்கிறது. முதல் நாள் 16ம் தேதி கார்னிவல் திருவிழாவை கவர்னர் கைலாஷ்நாதன் தொடங்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் பின்னணி பாடகி ஸ்வேதா மோகன் மற்றும் குழுவினர் திரை இசை நிகழ்ச்சி, 17ம் தேதி பட்டிமன்ற நடுவர் ராஜா தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம், இசை அமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதையொட்டி, விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை கலெக்டர் ரவிபிரகாஷ் தலைமையில் சுற்றுலாத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் செய்து வருகின்றனர். மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us