/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காரைக்காலில் சமுதாய கல்லுாரி ம.மு.க., வரவேற்பு
/
காரைக்காலில் சமுதாய கல்லுாரி ம.மு.க., வரவேற்பு
ADDED : நவ 16, 2024 02:17 AM
புதுச்சேரி: காரைக்காலில் சமுதாய கல்லுாரி ஆரம்பிக்க முடிவு செய்துள்ளதை புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்ற கழகம் தலைவர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.
அவரது அறிக்கை:
காரைக்காலில் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகம் ஒரு சமுதாயக் கல்லுாரியைத் துவங்க உத்தேசித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது. புதுச்சேரி அரசு ஒரு சமுதாயக் கல்லுாரியை நிறுவ வேண்டும் என, எனது கோரிக்கை நிறைவேறாத நிலையில், புதுச்சேரிப் பல்கலைக்கழகம் துவங்க முன்வந்துள்ளது.
இக்கல்லுாரி நிறுவப்பட்டு சரியான முறையில் நடத்தப்பட்டால் அது காரைக்காலின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவும்.
ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்மார்ட் இந்தியா, மேக் கப் இந்தியா போன்ற திட்டங்களைத் தொடங்கத் தேவையான மனித வளத்தை அளித்து வேலை வாய்ப்பு, வருமானம், வளர்ச்சி ஆகியவற்றை காரைக்காலுக்கு அளித்து அதன் வளர்ச்சிக்கு சமுதாயக் கல்லுாரி உதவும். இக்கல்லுாரி துவங்க தேவையான இடத்தை தேர்ந்தெடுத்து பல்கலைக்கழகத்திற்கு அளிக்க புதுச்சேரி அரசு முன் வர வேண்டும்.

