ADDED : நவ 01, 2026 08:39 PM
முதியவர் சாவு: நிரவி, விழிதியூர் பிரதான சாலையில் திருவாசல் குளம் உள்ளது. இக்குளத்தில் நேற்று (அக்.,31) விழிதியூரைச் சேர்ந்த சேகர், 60, என்பவர் இறந்து கிடந்தார்.
அவரது மனைவி அபிராமி புகாரின் பேரில், நிரவி காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப் பதிந்து விசாரித்தார்.
சேகருக்கு அதிகம் மதுப்பழக்கம் மற்றும் பார்வைக் குறைபாடு இருந்த நிலையில், அவர் குளத்தில் தவறி இறந்தது தெரியவந்தது.
நபர் கைது: திருப்பட்டினம் பைபாசில் உள்ள மதுக்கடை அருகில் நேற்று மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட பூம்புகார் பகுதியை சேர்ந்த குமார், 50, என்பவரை திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்தார்.
முதியவர் சாவு: திருப்பட்டினம் மகாதோப்பு பகுதியில் செயல்பட்டு வரும் சாராயக்கடையில் நேற்று 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக திருப்பட்டினம் போலீசாருக்கு தகவல் வந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற சப்இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து இறந்தவர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
