தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்

காரைக்கால் கிரைம் செய்திகள்


UPDATED : நவ 11, 2026 06:39 PM

ADDED : நவ 11, 2026 06:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 11, 2026 06:39 PM ADDED : நவ 11, 2026 06:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

6 பேர் கைது: திருப்பட்டினம் சனிப்பாறை அருகில் மதுபோதையில் தகராறு செய்த அதேப் பகதியை சேர்ந்த சந்திரசேகர், 39, என்பவரை திருப்பட்டினம் சப் இன்ஸ்பெக்டர் முருகன் கைது செய்தார்.

அம்பகரத்துார் ரயில் நிலையம் அருகே மது போதையில் தகராறு செய்த திருவாரூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன், 27, பண்டார், 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

கோட்டுச்சேரி பகுதியில் மதுபோதையில் தகராறு செய்த மயிலாடுதுறை விக்னேஷ், 27, திருவாரூர் நன்னிலம் பகுதி ஆதிநாதன், 26, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நிரவி பகுதியில் பொதுஇடத்தில் மது அருந்திய விக்னேஷ், 35, என்பவர் கைது செய்யப்பட்டார்.

பெண் மீது வழக்கு: காரைக்கால் கீரைத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி நித்யா. இவரது வீட்டு வாசலில் மீன்குழப்பு ஊற்றியிருந்தது. இது குறித்து நித்யா அருகில் உள்ள கருணாநிதி மனைவி வள்ளியிடம் கோட்டபோது, அவர், நித்யாவை ஆபாசமாக திட்டினார். நித்யா புகாரின் பேரில், நகர காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ஆபாசமாக பேசியதாக வள்ளி மீது வழக்கு பதிந்தனர்.

ஆண் சடலம் மீட்பு: கோட்டுச்சேரியைச் சேர்ந்த சிகாமணி, 43, என்பவர் நேற்று முன்தினம் கீழகாசாகுடி பகுதியில் உள்ள இட்லி கடை அருகே இறந்து கிடந்தார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, அவர் இறப்புக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

போதை கணவர் சாவு: காரைக்கால், கோவில்பத்து தென்றல் நகரை சேர்ந்தவர் வினோத்குமார், 45. இவரது மனைவி துர்க்காதேவி. இருப்பிள்ளைகள் உள்ளனர். துர்க்காதேவி இறந்த நிலையில் வினோத்குமார் மனவேதனையில் மதுபோதைக்கு அடிமையானார்.

நேற்று முன்தினம் பி.கே.,சாலையில் வினோத்குமார் மதுபோதையில் இறந்து கிடந்தார். இது குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us