தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சம்பா, தாளடி பயிர்களுக்கு பிந்தைய மானியம் காரைக்கால் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

 சம்பா, தாளடி பயிர்களுக்கு பிந்தைய மானியம் காரைக்கால் டெல்டா விவசாயிகள் கோரிக்கை

 சம்பா, தாளடி பயிர்களுக்கு பிந்தைய மானியம் காரைக்கால் டெல்டா விவசாயிகள் கோரிக்கை


ADDED : ஏப் 13, 2026 04:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 13, 2026 04:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்கால்: காரைக்காலில் சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரிய பிந்தைய மானியத்தை தேர்தல் விதிமுறைகளை காரணம் காட்டாமல் விவசாயிகளுக்கு வழங்க டெல்டா விவசாயிகள் நலசங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

காரைக்கால் மாவட்டத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே புதுச்சேரி மாநிலம் முழுதும் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்று அடைய வேண்டும் என, புயல் வேகத்தில் அரசு செயல்பட்டது.

இதில் புதிய சாலைகள், சமுதாய கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிக்கு பூமி பூஜைகள் போடப்பட்டது. ஆனால் விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய சாம்பா, தாளடிக்கு பிந்தைய மானிய தொகை முறையாக சேரவில்லை. தேர்தலை காரணம் காட்டி அரசாணை வந்ததும், அதன்பிறகு மானிய தொகை கொடுக்க வேளாண்துறை முயற்சிக்கவில்லை.

கடந்த ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் முடிந்த பின், விவசாயிகளுக்கு முறையாக கொடுக்க வேண்டிய சாம்பா, தாளடி பயிர்களுக்கு பிந்தைய மானிய தொகையை விடுவிக்க வேண்டும் எனத முயற்சியையும் அதிகாரிகள் எடுக்கவில்லை.

அரசாணை மூலமாக உயர்த்தப்பட்ட சாம்பா, தாளடிக்கு பிந்தைய மானிய தொகையை ஏக்கர் ஓன்றுக்கு 6 ஆயிரம் ரூபாயை தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாக கொடுக்க வேண்டும். பிந்தைய மானியம் விவசாயிகளுக்கு இந்த நேரத்தில் தான் கிடைக்க வேண்டும். ஆனால் பருத்தி மற்றும் எள், உளுந்து போன்றவைகளை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துகள் வாங்கிட உதவியாக இருக்கும். எனவே வேளாண் துறை அதிகாரிகள், தேர்தல் விதி முறைகளை காரணம் காட்டி காலம் தாழ்த்தாமல் உடனடியாக சம்பா மற்றும் தாளடி பயிர்களுக்கு உரிய பிந்தைய புதிய மானியத்தை அரசு உடனே வழங்க வேண்டும் என, காரைக்கால் மாவட்ட டெல்டா விவசாயிகள் நலசங்கம் இணை செயலாளர் சோமு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us